இருப்பது 9.5 லட்சம் அரசு வேலை.. 2,397 கோடி அரசு வேலை பாஜக எப்படி வழங்கும்..? அண்ணாமலைக்கு அமைச்சர் பிடிஆர் கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2024, 1:48 pm

இருப்பது 9.5 லட்சம் அரசு வேலை.. 2,397 கோடி அரசு வேலை பாஜக எப்படி வழங்கும்..? அண்ணாமலைக்கு அமைச்சர் பிடிஆர் கேள்வி!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற மூலம் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி நேற்றைய முன்தினம் வேலூர் பகுதியில் வந்தபோது, “2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும். அப்படி அமைந்தவுடன், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது X பக்கத்தில், ஒரு ஒப்பீட்டுக்கு, தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்…

BJP கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று.அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்!

அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா? என பதிவிட்டுள்ளார். இவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!