மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2023, 7:42 pm

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக விமர்ச்சியுள்ளார்.

அவர் பேசியதாவது, அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட முதல்வர் அல்லது கட்சியின் உயர் பொறுப்புக்கு செல்லமுடியும், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் எளிதாக கிடைப்பதால் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

இவ்வாறு, நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி நடக்கிறது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார்.

மேலும், சட்டம்-ஒழுங்கு சீரழிந்து தமிழ்நாடு கொலைக்களமாக மாறி வருகிறது. திமுக ஆட்சியில் மேட்டூர் உபரிநீர் திட்டப்பணிகள் மந்த நிலையில் நடக்கின்றன, என்றும் முன்னதாக திருமண மண்டபங்களில் மது பரிமாறலாம் என்ற உத்தரவை அதிமுக கண்டித்த பிறகுதான் திருமண மண்டபங்களில் மது பரிமாறுவதற்கான உத்தரவு வாபஸ் பெறப்பட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டினார்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!