டிரெண்டிங்

பன்னுக்கு GST இல்ல..ஆனா CREAMக்கு GST போடறீங்க.. என்ன மேடம் இப்படி? நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்த தொழிலதிபர்!

கோவை கொடிசியா வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான வரி துறை, ஜி.எஸ்.டி , கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர்.

இதனைதொடர்ந்து கொடிசியா வளாகத்தில் சிறு,குறு தொழில் முனைவோர் , பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துரையாடினார்.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து துறைகளை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்றனர். கொடிசியா மற்றும் லகு உத்யோக் பாரதி தொழில் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்றார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் தங்களது கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து தொழில் முனைவோர் மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மேடையில் பேசியபோது, மக்களின் குறைகளை கேட்பது அதிகாரிகளின் கடமை.

அதிகாரிகளிடம் ஒரு வார்த்தை சொன்ன நிலையில் அதிகாரிகள் இன்று வந்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்று இருக்கின்றனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்

ஜி.எஸ்டி, கஸ்டம்ஸ், வருமான வரித்துறை, MSME, iob, canara வங்கி அதிகாரிகள் என பல துறை அதிகாரிகள் இன்று வந்திருக்கின்றனர் எனவும், கொடுக்கப்பட்ட மனு ஒவ்வொன்றுக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொழில்துறையில்1500 சட்டங்களை களைந்து எடுத்து இருக்கின்றோம். 40 ஆயிரம் புகார்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவைக்கு அட்டல் இன்னோவேசன் மிஷன், டிபன்ஸ் காரிடர் போன்றவை செயல்படுத்த படுகின்றது எனவும், தொழில் வளர்ச்சிக்கு நல்ல அனுகூலமான மண்டலம் கோவை என தெரிவித்தார்.

கொடிசியா அமைப்பு அரசின் திட்டங்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கின்றது என தெரிவித்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிட்பி வங்கி கிளையினை கோவை குறிச்சி பகுதியில் திறந்துள்ளதை கூறிய அவர், 163 முக்கிய கிளஸ்டர்கள் இருக்கும் இடங்களில் சிட்பி குறித்து விசாரித்து இருப்பதாகவும், அடுத்த 3 வருடத்தில் 70 இடங்களில் கிளைகள் திறக்க சிட்பி முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

கோவையில் மேலும் ஒரு சிட்பி கிளை வர இருக்கின்றது என தெரிவித்த அவர்,கோவையில் ஏற்கனவே திறக்கப்பட்ட சிட்பி கிளையில் ஒரு வருடத்தில் 491 கோடி ரூபாய் வங்கி கடன் கொடுக்க தீர்மானம் செய்து 314 கோடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும், இது தவிர்த்து அனைத்து நடவடிக்கையும் மொத்ததாக சேர்த்து 620 கோடி வரை கடன் கோவை சிட்பி கிளை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

மைக்ரோ தொழில்களுக்கு சிட்பி வங்கி கிளையில் கடன் கொடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.இந்த பட்ஜெட்டில் சிறு,குறு தொழில்களுக்கு பல சலுகைகள் , திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதை எல்லா இடங்களிலும் சென்று தெளிவு படுத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.மேலும் தமிழகத்திற்கும் கோவைக்கும் எந்தெந்த மாதிரியான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டவர், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு எதுவுமே வரவில்லை என சொல்பவர்களுக்காக இதை சொல்கின்றேன் என தெரிவித்தார்.

தொழில்துறையினரிடம்அதிகாரிகள் மனுக்களை வாங்கி இருன்றனர். டெல்லி சென்றதும் இது குறித்து அதிகாரிகளிடம பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஜிஎஸ்டி கோரிக்கைகள் குறித்த விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் கட்டாயம் பேசுகின்றேன் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொழில் துறையினர் மத்தியில் வாக்குறுதி அளித்தார்.

முன்னதாக ஹோட்டல் உரிமையாளர்,மிக்சர், ஸ்வீட்,மற்றும் உணவு க்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என நகைச்சுவையாக பேசி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

‘மதராஸி’ படத்தில் நடிக்க இருந்த பாலிவுட் நடிகர்..விலகியதற்கான காரணத்தை கூறிய ஏ.ஆர்.முருகதாஸ்.!

ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக் அமரன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,தற்போது மதராஸி…

9 hours ago

பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ஆசையா..வெளிவந்த அப்டேட்டால் ரசிகர்கள் குஷி.!

நடிகர்,நடிகைகள்,குழந்தை நட்சத்திரங்கள் தேவை! தமிழ் திரையுலகில் சமூக அரசியல் சார்ந்த கதைகளை அழுத்தமாக சொல்லக்கூடிய இயக்குனராக பெயர் பெற்றவர் பா.ரஞ்சித்.இவர்…

10 hours ago

எப்ப வறீங்க?..சரமாரியாக கேள்வி கேட்ட ரசிகர்கள்..நொந்து போன ‘மைனா’ பட சூசன்.!

நேகட்டிவ் விமர்சனங்களால் மனமுடைந்த சூசன் தமிழ் சினிமாவில் முக்கியமான பாத்திரங்களில் நடித்த சில நடிகைகள் சில படங்களுக்குப் பிறகு திரைத்துறையில்…

11 hours ago

உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றிய செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குங்க.. பாய்ந்து வந்த அண்ணாமலை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…

11 hours ago

கவலைக்கிடம்.!நெஞ்சுவலியால் மைதானத்தில் சரிந்த முன்னாள் கேப்டன்..!

மாரடைப்பால் துடித்த தமீம் இக்பால்! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தமீம் இக்பால் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில்…

12 hours ago

விராட்கோலிக்கு END CARD…’ருத்ராஜ் கெய்க்வாட்’ போடும் மாஸ்டர் பிளான்.!

அணியின் பேலன்ஸா? சுயநல முடிவா? ஐபிஎல் 2025 தொடர் மிகவும் பரபரப்பாக தொடங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

13 hours ago

This website uses cookies.