ஜனநாயகத்துக்கு விரோதமா செய்துவிட்டு குற்ற உணர்ச்சியே இல்ல.. அழுகுனி ஆட்டம் ஆடும் பாஜக : முதலமைச்சர் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 மார்ச் 2024, 8:35 மணி
CM
Quick Share

ஜனநாயகத்துக்கு விரோதமா செய்துவிட்டு குற்ற உணர்ச்சியே இல்ல.. அழுகுனி ஆட்டம் ஆடும் பாஜக : முதலமைச்சர் விமர்சனம்!

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார்.

இன்று திருவாரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு முதல்வர் பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக வெளியிட்டது தேர்தல் அறிக்கை அல்ல, எடப்பாடி பழனிச்சாமியின் பம்மாத்து அறிக்கை. 2019 மக்களவை தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி பட்டனை அழுத்திய போது அருகில் எடப்பாடி பழனிச்சாமி கைத்தட்டினார்.

அதன் பின் எய்ம்ஸ் அமைக்காமல் ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள் என ஒருமுறையாவது மத்திய அரசின் கதவை தட்டினீர்களா? தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றுகிறது.

1.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1000 உரிமை தொகை கிடைக்கிறது. பாஜக வெற்றி பெற்றால் ஜம்மு காஷ்மீர் நிலை தான் பிற மாநிலங்களுக்கும் ஏற்படும், அக்கட்சி நாட்டை மிக மோசமான வகையில் பாழ்படுத்திவிட்டது, எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஜனநாயகத்திற்கு விரோதமான அத்தனையும் செய்துவிட்டு பாஜக ஆடும் ஆட்டம் அழுகுனி ஆட்டம் என விமர்சித்துள்ளார்.

  • Beggar பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!
  • Views: - 169

    0

    0