100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு எந்த பாதிப்பு இல்லை : மின் கட்டணம் உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2022, 7:58 pm

கரூரில் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர் கடந்த ஆட்சிக் காலங்களில் விட்டுச் சென்ற கடன் சுமை காரணமாக மின்சார வாரியம் எழுத்து மூடக்கூடிய சூழ்நிலை இருந்தது.

புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு சுமார் 9 ஆயிரம் கோடி அளவிற்கு வழங்கப்பட்ட நிதி ஆதாரத்தின் காரணமாகவே மின்சார வாரியம் இயங்கி வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட 3600 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது .

100 யூனிட் கீழ் மின்சாரத்தை பயன்படுத்துவோர்க்கு எந்த பாதிப்பு இல்லை. இதில் 1 கோடி உள்ளார்கள். தமிழக அரசின் மின் கட்டண உயர்வு என்பது மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவான அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் தமிழக அரசிற்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி