கல்வெட்டில் செந்தில் பாலாஜி பெயர் இல்ல.. நடவடிக்கை எடுக்கணும் : காங்., எம்பி ஜோதிமணி கறார்!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2024, 6:27 pm

பிரதமர் மோடி தொடங்கி வைத்த மதுரை – பெங்களூர் வந்தே பாரத் ரயில் கரூர் வந்தடைந்தது. கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமணி, பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வரவேற்றனர். கரூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை வரவேற்பதற்காக எம்பி ஜோதிமணி உடன் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பாஜக தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு இருந்தனர். கரூர் ரயில் நிலையத்தை வந்தே பாரத் ரயில் வந்தடைந்த போது, பாரத பிரதமர் மோடி வாழ்க என்று பாஜகவினரும், ராகுல் காந்தி வாழ்க என காங்கிரஸ் கட்சியினரும் ஒரே நேரத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி,

மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தேபுரத்துறையில் கரூர் வழியாக செல்லும்போது கரூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று பரவலாக பேசப்பட்ட நிலையில் அது குறித்து ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது அதன் காரணமாக கரூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் தற்போது நின்று செல்கிறது இதேபோல் ரயில்வே நிர்வாகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது மத்திய அரசு அதையும் சரி செய்ய வேண்டும். இரயில்வே துறைக்கு என்று தனி பட்ஜெட் இல்லாத காரணத்தால் எந்த மாதிரி திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற பிரச்சினை இருக்கிறது .

கடந்த முறை கரூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த அடிக்கல் நாட்டும் போது கல்வெட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததும் அது சரி செய்யப்படும் என்றனர்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 249

    0

    0