சசிகலாவுக்கு மீண்டும் இடமில்லை.. கருவாடு மீன் ஆகாது : கறந்த பால் மடி புகாது.. ஆர்பி உதயகுமார் தாக்கு!
Author: Udayachandran RadhaKrishnan18 July 2024, 12:52 pm
மதுரை சமயநல்லூர் பகுதியில் அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்டப்பட்ட சமயநல்லூர் பகுதியில் விஷசாராயம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து, பொதுமக்களிடம் பேசியவர். தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்திகிறார்கள். உயர்த்திய மின் கட்டணத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல், நியாயம் படுத்துகிறார்கள். 8 ஆண்டுகள் மின்சார கட்டணத்தை உயர்த்தாத அரசு அதிமுக அரசு. மரக்காணம் பகுதியில் 2023 ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலி அன்று இது போன்ற சம்பவம் நடைபெறாது என்றார். அது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது. கண்டிக்க தவறிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டேன் என கூறும் ஸ்டாலின் ஆடாதெரியாதவன் தெரு கோணல் என்பது போல தனக்கு ஆட தெரியவில்லை என ஸ்டாலினால் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதே அதிகாரிகளை வைத்து தான் அதிமுக ஆட்சியில் காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான காவல்துறையை வைத்திருந்தோம் என்றார்.
நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, தரக்குறைவாக பேச விரும்பவில்லை நடந்ததை குறிப்பிட விரும்புகிறேன். 33 ஆண்டு காலம் அம்மாவுடன் இருந்தவர்கள் தென் தமிழகத்தில் இன்றைக்கு ஆடி மாதத்தில் அம்மா வழியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்.? உங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்து இருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள்.? உங்களுக்கு இருக்கும் பணத்திற்கு, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்த பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும். அரசியலில் ஓரம் கட்டப்பட்டதற்கு அம்மா காரணம் அல்ல அம்மாவின் நிழலாக இருக்கும் ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்றவர் தான் காரணம். அவர்கள், இவர்கள் இருந்தால் தான் வெற்றி பெறும் என்பது கற்பனை கதை. The iron man of tamilnadu எடப்பாடி பழனிச்சாமி., என்றார்.
ஆர்பி. உதயகுமார் செய்தியாளர் சந்தித்தபோது விஷ சாராயத்தால் உயிர்பழி யானை கண்டித்து திமுக. பதவி விலக வேண்டும். மக்களை திசை திருப்ப அதிகாரிகளை பழி வாங்குகிறார்கள்.
8ஆண்டாக அதிமுக மின் கட்டணம் உயர்த்த வில்லை. இமக்ஷப்போது மின் கட்டணத்தை ஆளும்கட்சி உயர்த்தி இருப்பது மகக்ளுக்கு வேலணை அளிக்கிறது. இதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம் என்றார்.
சசிகலா சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, கறந்த பால் மடி புகாது.கருவாடு மீனாகாது. எடப்பாடி யார் 4அரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி நடத்தினார். உள்ளடி வேலையின் காரணமாக மீண்டும் எடப்பாடி யார் முதல்வராக வர முடியவில்லை.
அதை தொடர்ந்து பொதுச்செயலாளராக எடப்பாடி யார் தேர்ந்து எடுக்கப்பட்டு அதிமுக தொண்டர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள்.
அவர்கள் சார்ந்த சமுதாய மக்கள் கல்வியில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுத்தார்களா பின்புலத்தை காட்டி தங்களை வளர்த்து கொண்டார்களே தவிர சாமானிய தொண்டனுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க வில்லை.
பல தலைவர்கள் ஜெயலலிதா அவர்கள் காலத்தில் கேள்விக்குறியானதற்கு யார் காரணம். பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
உங்கள் சுற்றுப்பயணம் சுற்றுலா பயணமாக தான் இருக்கும். இவர்கள் சுற்றுப்பயணம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தது போல் தான்.
அவர்கள் நினைத்திருந்தால் ஏழை எளிய மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாமே. எதுவும் செய்யாமல் அவர்களுக்கு அதிகாரம் எப்படி மையம் கொண்டிருந்தது எங்களுக்கு எல்லாம்தெரியும். அவர்களால் வாழுவு பெற்றவர்கள் ஏதாவது பட்டியலிட்டு சொல்லட்டும் பார்க்கலாம்.
அதிமுக ச்ட்ட விதிப்படி பொதுக்குழு தான் தீர்மானிக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பை. மதிக்க வேண்டாமா. தேர்தல் ஆணையத்தை மதிக்க வேண்டாமா.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் விலகிகிறேன் என்று அவர்கள் தான் சொன்னார்கள். இப்போது அரசியலில் குதிக்கின்றேன் என்கிறார். எதை எடுத்து கொள்வது.
கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம்.
உள்ளடி வேலைகளின் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்தது.
33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா.
அவர் சார்ந்த சமூக மக்களுக்காக ஏதாவது செய்ததாத சசிகலாவால் முடியுமா?
ஜெயலலிதாவின் பின்புலத்தை காட்டி தன்னை தான் வளர்த்துக் கொண்டார் சசிகலா. தவிர மக்களுக்கு எதுவும் அவர் செய்ததில்லை.
திருநாவுக்கரசர், காளிமுத்து, திண்டுக்கல் சீனிவாசன், சேடபட்டி முத்தையா போன்றோர் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானதற்கு யார் காரணம்?
ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்றுள்ளார் சசிகலா. இதை எந்த மேடையிலும் விவாதிக்க தயார் என கூறினார்.