தலைவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல்.. கூட்டணியில் இருந்தே திமுகவை விமர்சித்த திருமாவளவன்!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2024, 1:11 pm

பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனமானது, கடும் கண்டனத்திற்குரியது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளனர். 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசிக்க கூடியவர் ஆம்ஸ்ட்ராங்.

உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. சாமானிய தலித் முதல் தலைவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!