பட்ஜெட்டில் பார்க்கற மாதிரி எதுவும் இல்லை.. வெறும் குப்பை தான் இருக்கு : அமைச்சர் டிஆர்பி ராஜா கருத்து!
Author: Udayachandran RadhaKrishnan24 July 2024, 2:28 pm
CII எனப்படும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பாக INVESTOPIA GLOBAL என்ற முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை அடையாறில் நடைபெற்றது…
இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஐக்கிய அரபு எமிட்ரேட்ஸ் பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மரி ஆகியோர் கலந்து கொண்டனர்…மேலும் பல ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்…
அமைச்சர் டி ஆர் பி ராஜா செய்தியாளர் சந்திப்பு
இதற்கு முன்பு துபாய்-யில் ஒரு நிகழ்வில் UAE பொருளாதர அமைச்சரை சந்தித்த போது அவரை சென்னைக்கு அழைத்து ஒரு முதலீட்டாளர் மாநாடு நடத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்…அதன்படி இன்று இந்த மாநாடு நடைபெறுகிறது…
நாளை முதலமைச்சரை UAE பொருளாதார துறை அமைச்சர் சந்தித்து பேச இருக்கிறார்…முதலீடுகள் குறித்து பல பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது…
தமிழ்நாட்டுக்கும்,ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே பல புதிய முதலீடு ஒப்பந்தகள் நடைபெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது…
தமிழ்நாடு தற்போது தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது…இதில் UAE யும் சேர்ந்தால் தமிழ்நாட்டில் வளர்ச்சி இன்னும் பிரகாசமாக இருக்கும்..இதன் மூலம் மிகப்பெரிய வேலைவாய்ப்புகள் உருவாகும்..
பல்வேறு முதலீட்டாளர்கள் அங்கிருந்து வந்துள்ளனர்..இந்த மாநாடு முழுமையாக முடிந்த பிறகு தான் இந்த மாநாட்டின் மூலம் எவ்வளவு முதலீடுகள் வர போகிறது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும்…
வெறுமனே இத்தோடு முடிந்து விடமால் இதனை தொடர்ந்து பின்தொடர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்…அதன்படி ஒரு குழுவும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது…
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் சாதனங்களில் 30 சதவீதம் தமிழகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது…இது மேலும் அதிகரிக்கும்.
தமிழகத்தில் இருந்து சென்ற ஆண்டு 9 பில்லியன் டாலர் என்று இருந்த எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஏற்றுமதி இந்த ஆண்டு 12 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது…இது மேலும் அதிகரிக்கும்…
இந்த முறை மேலும் பல புதிய எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்கள் வர உள்ளது…அந்த நிறுவனங்கள் வந்த பிறகு மிகப்பெரிய எலெக்ட்ரானிக்ஸ் வளர்ச்சி தமிழகத்தில் ஏற்பட உள்ளது…இதன் மூலம் தமிழக அரசுக்கு நல்ல வருமானம் மற்றும் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது…
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொழில் துறை அமைச்சராக எப்படி பார்க்கிறீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு,
நான் சாதாரண மனிதனாக,தமிழனாக பார்க்கிறேன்,
அதில் பார்க்க கூடிய அளவில் எதுவும் இல்லை, பட்ஜெட்டில் வெறும் குப்பை தான் இருக்கிறது என பதிலளித்தார்.