ஒடிசா ரயில் விபத்து போல இன்னும் நிறைய ரயில் விபத்துகள் நடக்கும் : பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan7 June 2023, 6:41 pm
மதுரை எஸ்.எஸ்.காலனியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு தொடர கூடாது. அவருக்கு பதிலாக கே.என்.நேருவை அறநிலைய துறை அமைச்சராக நியமிக்கலாம்.
அவர் நல்ல வைஷ்ணவர். அவர் கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டார். மாநில கல்வி தரத்தில் குறைபாடு உள்ளது. எனவே அது தொடர்பாக ஆளுநர் பேசியதில் தவறில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் மாப்பிள்ளையை காப்பாற்றவே வெளிநாடு டூர் போனார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல. ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமரை பதவி விலக சொல்பவர்கள் ஏன் கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லவில்லை? தமிழக டாஸ்மாக்கிலேயே கள்ளச்சாராயம் விற்கின்றனர்.
அனிதா உயிரிழந்த போது நீட் தேர்வுக்கு தடை விதிக்க சொன்ன ஸ்டாலின், தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வலியுறுத்தி ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட பின்னர் மொத்த டாஸ்மாக்கையும் மனிதாபிமான அடிப்படையில் மூடியிருக்க வேண்டாமா?
ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் சதிவேலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. வாலாடியில் கூட ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன் வைத்து, அதற்கு முன்னதாக நக்சலைட்கள் இன்னும் நிறைய சதிவேலைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.