இந்த இரண்டு பேர் தான் எனக்கு தைரியம் கொடுத்தது : தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்பு பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2023, 3:41 pm

நடிகை குஷ்பு சமீபத்தில் அவரது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே எனது சிறு வயது சம்பவத்தை பகிர்ந்தேன், எனக்கு தைரியம் கொடுத்ததே என்னுடைய மகள்கள் தான்.

ஆணாதிக்கம் என்ற முறை அனைத்து துறைகளிலும் உள்ளது. இன்று வரை ஆண் என்ற கர்வத்திலிருந்து அவர்கள் வெளியே வரவே இல்லை.

இடஒதுக்கீடு இருந்தும் பெண்களுக்கான வாய்ப்புகள் முழுமையாக வழங்கப்படவில்லை. பெண்கள் குறித்த சமூகப்பார்வை மாறினால் மட்டுமே பாதுகாப்பு உறுதியாகும்.

அரசியல், சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பாகுபாடு தொடர்கிறது. அனைத்துத் தடைகளையும் தகர்த்து பெண்கள் வரவேண்டியது அவசியம் என்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி