தகுதியில்லாத அண்ணாமலை அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறலாம் : சி.வி. சண்முகம் ஆவேசம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2023, 11:12 am

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதலமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.

அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும் என்று கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்து அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவை விமர்சித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:- ஆளுமைகிக்க தலைவி ஜெயலலிதாவை பற்றி கருத்துச் சொல்ல அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை.

பாஜக கட்சி என்பது வேறு.. அண்ணாமலை என்பவர் வேறு. கவுன்சிலராக கூட அண்ணாமலை இருந்ததில்லை. அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம். சொந்த கட்சியினரே அண்ணாமலை மீது ஊழல் புகார் கூறி வருகின்றனர் என்று கூறினார்.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…