பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகின்றனர்.. காங்கிரஸ் மீது BJP தேர்தல் ஆணையத்தில் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 9:19 pm

பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகின்றனர்.. காங்கிரஸ் மீது BJP தேர்தல் ஆணையத்தில் புகார்!

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, கட்சி தலைவர் ஓம் பதக் ஆகியோர் இன்று தேர்தல் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தனர்.

அந்த புகாரில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியலமைப்பு மாற்றப்படும் போன்ற பொய்களை பரப்பி சமூகத்தில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திரிவேதி கூறுகையில் “தனிப்பட்டவர்கள், கொள்கைகள் மற்றும் அரசியலமைப்பு சிஸ்டம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் மற்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது. சமூகத்தில் பதற்றமான சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற 15-க்கும் மேற்பட்ட சம்பவங்களை தேர்தல் ஆணையம் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

மேலும் படிக்க: காவிரி பிரச்சனையால் திமுக கூட்டணி டமார்?…. காங்கிரசை கண்டிக்கும் வைகோ; பதுங்கும் திருமா!

இது தேர்தல் நியாயம் மற்றும் சுதந்திரமான நடைபெற தடையாக இருக்கும். அமைப்பு அடிப்படையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்து வருகின்றன. தொடர்ந்து செய்து வரும் நிலையில், அதன் சமூக வலைத்தள பிரிவுகள் தொடர்ந்து அதே பொய்களை தெரிவித்து வருகின்றன” என்றார்.

இந்த விவகாரம் தேர்தலை நியாயமாக மற்றும் சுதந்திரமாக நடத்த சவாலாக இருக்கும் என தேர்தல் ஆணையத்திடம் எச்சரித்துள்ளோம் என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

  • director entered van when shalini pandey changing dress உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே… ஒரு அதிர்ச்சி சம்பவம்!