பாபர் மசூதி இடித்து ராமர் கோவில் கட்டியதால் ஓட்டு போடுவார்கள் என நினைத்தால் அவர்கள் முட்டாள்கள் : திமுக எம்பி பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 9:42 pm

பாபர் மசூதி இடித்து ராமர் கோவில் கட்டியதால் ஓட்டு போடுவார்கள் என நினைத்தால் அவர்கள் முட்டாள்கள் : திமுக எம்பி பரபர!

துரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் தமிழக முதல்வரின் 71வது பிறந்தாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதிமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்;- 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மாபெரும் புரட்சியை செய்துள்ளனர் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா காலத்தில் மற்ற மாநிலத்தில் முதல்வர்கள் வெளியேவே வரவில்லை ஆனால் தமிழக முதல்வர் கொரோனா வாடிற்குள்ளே சென்று நலம் விசாரித்தார்.

தமிழ்நாட்டில் நான்காவது வளர்ச்சி நகரமாக மதுரை உள்ளது., வீர வசந்த ராயர் மண்டபம் 18 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

பாஜக வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திசை திருப்பப் படுகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. மோடி வரும் போதெல்லாம் தமிழ் மீது காதல் கொள்கிறார். இதே போல் தான் கேரளா, கர்நாடகாவிலும் கூறுகிறார்.

கோழி கூவுவது போல் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது மொழியில் பேசி வாக்குகளை களவாட பார்க்கிறார். சமஸ்கிருதனுக்கு ஒரு ஆண்டுக்கு 1500 கோடி செலவு செய்கின்றனர் ஆனால் தமிழுக்கு வெறும் 28 கோடி தான் ஒதுக்கி உள்ளனர்.

இந்தியாவில் 80 சதவீத துறைமுகம் தனியாரிடம் உள்ளது அதுவும் அதானி இடம் உள்ளது., தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை. தமிழகம் அந்த மோடி வெள்ள பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றாரா இல்லையே.

இப்போது பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டி உள்ளனர் இதற்காக ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தார்கள் என்றால் அவர்கள் முட்டாள்கள். என்றார்

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ