ரூ.1000 உரிமைத்தொகையை பெற இவர்கள் தான் தகுதியானவர்கள் : யோசனை சொன்ன வானதி சீனிவாசன்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 மார்ச் 2023, 8:11 மணி
Vanathi - Updatenews360
Quick Share

சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு தற்போது தகுதி வாய்ந்த மகளிருக்குத்தான் அளிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த தகுதி என்னவென்று தெரியவில்லை.

ஒவ்வொருத்தரும் மது வாங்குவதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஏனெனில் அவர் எப்படி இறக்கிறார் என்பது அப்போது தான் தெரியும். குடியால் இறந்தார் என்றால் அரசாங்கம் அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த உரிமைத்தொகைக் கொடுக்கும் போது அதிகமாக டாஸ்மாக் செலவு செய்யும் ஆண்மகன்களின் வீடுகளில் உள்ள மகளிருக்கு தான் முதலில் உரிமைத் தொகையை வழங்க வேண்டும்.

ராகுல் காந்தி தகுதிநீக்கம் விவகாரத்தைப் பொறுத்தவரை, பிரதமரை அவர் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை, மோடி என்ற குறிப்பிட்ட சமுதாயத்தை அவர் விமர்சனம் செய்துள்ளார் என்பது தான் இந்த வழக்கின் அடிப்படை.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சாதி ரீதியாக யாரையும் விமர்சிக்கக் கூடாது என்பதே அடிப்படை. அதனால் தான் அவர் மீது இந்த வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரமதரை விமர்சித்தால் இந்த தண்டனை என்பது போல கொண்டு போவது சரியல்ல என்றார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 334

    1

    0