தேசிய கல்விக் கொள்கையை காப்பியடிச்சிருக்காங்க.. இந்திக்கு பதில் உருது மொழியை திணிக்கிறாங்க : அண்ணாமலை அட்டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2024, 2:06 pm

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி , நீட் நுழைதேர்வு பற்றி விமர்சனம் செய்யும் திமுக , அது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நீட் மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள் குறித்து வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், நீட் பற்றி தவெக தலைவர் விஜய் திமுக கருத்துக்கு ஆதரவாக கூறிய கருத்துக்களை பாஜக சார்பாக ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒரு சாமானியனாக விஜய் கூறியது சரியல்ல. அவர் இன்னும் நீட் பற்றி ஆய்வு செய்து பேசியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அடுத்து மாநில கல்வி கொள்கை மற்றும் மத்திய அரசின புதிய கல்வி கொள்கை பற்றி பேசிய அண்ணாமலை, புதிய கல்வி கொள்கையில் 3 மொழி படிக்க வேண்டும் என சொல்கிறது. இரு மொழி கொள்கையை தாண்டி 3வதாக ஒரு மொழியை படிக்க மக்கள் விரும்புகிறார்கள்.

மத்திய அரசு கல்வி கொள்கை 2020இன் படி, இந்தி கட்டாயம். ஆனால் அதனை தமிழக அரசு ஏற்கவில்லை. மாநில அரசின் இரு மொழி கல்வி கொள்கை தான் நடைமுறையில் உள்ளது.

ஆனால் இப்போது புதிய கல்வி கொள்கையில் 3 மொழி கொள்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்தி கட்டாயமல்ல. அதற்கு பதிலாக வேறு விருப்ப மொழி கற்று கொள்ளலாம். மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டம் குல கல்வி என்று திமுக விமர்சிக்கிறது. அதே நேரத்தில் கடலோரத்தில் வசிக்கும் மீனவ குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கடற்கரை பற்றி பாடம் சொல்லி கொடுப்பார்களாம் இது குலக்கல்வி இல்லையா.? என்றும் விமர்சனம் செய்தார்.

மேலும், மாநில புதிய கல்வி கொள்கையில் உருது பள்ளிகள் அதிகம் கொண்டு வரவேண்டும் என கூறியிருக்கிறார்கள். உருது புத்தகம் அதிகம் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள். இது மாணவர்கள் மத்தியில் உருது திணிப்பு இல்லையா.?தாய் மொழியில் பயில வேண்டும் என மத்திய அரசு கல்வி கொள்கை கூறுகிறது. தமிழக அரசு தற்போது வெளியிட்ட கல்வி கொள்கையில் தான் தமிழ் மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என கூறியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைக்கும் இங்குள்ள மாணவர்களின் கல்வி தரம் ஏற்ப ஒரே மாதிரி கல்வி அளிக்க வேண்டும் என கூறுகின்றனர். அதுவும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு தரவுகள் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பார்த்து ஒரு சில விஷயங்களை மாற்றி தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 232

    0

    0