ஒரு ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்திருக்காங்க.. பணத்துக்காக 5 ஆண்டு அடமானம் வெக்க போறீங்களா? அண்ணாமலை கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan26 February 2023, 6:22 pm
இன்னிக்கு வரும் 500, 1000 ரூபாய்களுக்காக 5 ஆண்டு அடமானம் வைக்க போகிறிர்களா? என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம், பரிசு பொருட்களை பெரும் மக்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்தவர், ஈரோடு கிழக்கு தேர்தல் விதிமீறல் என்பது 500 வழக்குகளை தாண்டி சென்று கொண்டிருப்பதாகவும், தமிழக மக்கள் இந்த மாதிரி அராஜக தேர்தலை ஏற்கீறிர்களா? இந்த மாதிரி பரிசு பொருட்களை கொடுத்து தான்தேர்தல் நடத்த வேண்டுமா? அப்படிபட்ட கட்சிகள் இருக்கனுமா? அப்படி தான் வாக்களிக்க வேண்டுமா? என மக்களிடம் கேள்வி கேட்க விரும்புவதாக கூறினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒரு வாக்காளர்களுக்கு சராசரியாக ரூபாய் 20,000 மேல் செலவு செய்து உள்ளதாகவும், இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசியல் வளர்ச்சி பின்னால் செல்வதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் தமிழகத்தை விட வளர்ந்து விட போவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கொள்ளை அடிக்கும் பணத்தை தேர்தலின்போது வெளியே எடுப்பதாகவும், ஆட்சியில் கமிஷன் பெற்று சம்பாதித்த பணத்தை பினாமி மூலம் துபாய்க்கு அனுப்பி, அங்கிருந்து மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து தேர்தலில் செலவு செய்வதாகவும், இதனால், அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டதாக வேதனை தெரிவித்தார்.
இளைஞர்களை அரசியலில் வாங்க என்று சொன்னால், ஈரோடு கிழக்கு தேர்தலை பார்த்து ஓடுவதாக தெரிவித்தார். ஒரு தேர்தலுக்கு தொகுதிக்கு 45 கோடி ரூபாய் , இடைதேர்தல் என்றால் 100 கோடியை தாண்டுவதாகவும், ஆளுங்கட்சிக்கு அதுவே 250 கோடி வரை செலவாவதாக கூறியவர், தேர்தல் விதிமீறல் தொடர்பான எந்த வழக்கும் நீதிமன்றம் நிற்பதில்லை என்றும், அதனால் அதுதொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் வலியறுத்தினார்.
அரவக்குறிச்சி, திருமங்கலம் போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தலைகுனிவை ஏற்படுத்த உள்ளதாக கூறியவர், மக்கள் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் புதியவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்றவர், லஞ்சம் வாங்குவது போல் தான் ஓட்டுக்கு பணம் வாங்குவதும், முதலில் பணம் வாங்குவது கஷ்டம் என்றாலும் பிறகு பழகிடும் என்று சாடினார்.
அரவக்குறிச்சியில் தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை, அதன் வளர்ச்சி அதலபாதாளத்தில் உள்ளதகவும், அதுபோன்று, இதுபோல் ஈரோடு கிழக்கு மாற வேண்டுமா என்று கேள்வி எழுப்பியவர், அதற்கு சாட்சியாக அரவக்குறிச்சி தொகுதியை சேர்ந்த தான் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், 2024 தேர்தலிலும் தமிழகத்தில் 39 தொகுதிக்கும் இந்த புற்றுநோய் பரவ வேண்டுமா என்று கேள்வி எழுப்பியவர், தானும் சீமான் போல பேச ஆரம்பித்துவிட்டதாகவும் பேசினார்.
தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்றும், தன்னை திட்டியது தான் அவர்கள் செய்த சாதனை என்று சாடியவர், ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தை பத்திரிக்கையாளர்கள் கண்ணாடி போட்டு காண்பித்து விட்டதாகவும், அதற்கு வணக்கங்கள் என்றவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது முதல்வர் அறிவிப்பு என்பது தேர்தல் தோல்வி பயத்தில் தான் அறிவித்து விட்டதாக எண்ணுவதாகவும், முதலமைச்சர் பிரசாரத்தில் அறிவித்ததை வரவேற்றாலும், சொன்ன விதம், இடம், நேரம் தவறு என்றும், அறிவித்த படி பழைய பாக்கியை மீதமில்லாமல் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தனது மகன் செங்கலை எடுத்து வந்தததால் தான் 2021 ஆட்சிக்கு வந்தோம் என கூறுவது முதலமைச்சர் அவரையே அவமானம் படுத்திக்கொள்வதாகவும், 2026 ஆம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவமனை வரும் என்றவர், இன்னும் எத்தனை நாள் செங்கல் விவகாரத்தை பேசி மக்களை ஏமாற்றுவீர்கள் என குற்றச்சாட்டினார்.
உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் போல் அரசியலில் நடிப்பதாகவும், செங்கலை எடுத்தால், அந்த செங்கல் எடுத்து தோலை உரித்து உண்மையை சொல்வோம் என்றவர், 2024 தேர்தலில் பிரதமருக்காக மக்கள் வாக்களித்து தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்வோம் என்றார்.