பேரிடர் இல்லைனு சொன்னாங்க.. ஆனா இப்ப ஆய்வுக்கு வந்திருக்காங்க : நிதியமைச்சர் அறிவிப்புக்காக வெயிட்டிங் : அமைச்சர் உதயநிதி!
Author: Udayachandran RadhaKrishnan26 December 2023, 6:30 pm
பேரிடர் இல்லைனு சொன்னாங்க.. ஆனா இப்ப ஆய்வுக்கு வந்திருக்காங்க : நிதியமைச்சர் அறிவிப்புக்காக வெயிட்டிங் : அமைச்சர் உதயநிதி!
கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. படிப்படியாக வெள்ளம் வடிந்து வரும் நிலையில், மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.
பின்னர் தேசிய பேரிடர் மீட்புக்குழு மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். அதே போல மத்திய மாநில அரசுகள் நிவாரணம் பொருட்களும் வழங்கின.
பாதிக்கப்பட்ட மக்களக்கு தமிழக அரசு சார்பாக நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரண பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் நிதியமைச்சரின் வருகை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேரிடர் நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்குள் மோதல் போக்கு இல்லை என கூறிய அவர், முதலில் பேரிடரே இல்லை என நிதியமைச்சர் சொன்னார், தற்போது ஆய்வுக்காக வந்துள்ளார். ஆய்வு முடித்த பின் அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
0
0