வெளிநாட்டில் படிச்சனு சொல்றாங்க, ஆனா அதுக்கான தகுதி கொஞ்சம் கூட இல்ல : நிதியமைச்சர் பிடிஆர் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2022, 7:19 pm

மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோவை தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பெரிய கடை வீதியில் பணிபுரியும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மத்திய அரசின் திட்டங்களில் பதிவு செய்வதற்காக விழாவுக்கு வருகை தந்தனர்.

அவர்களுக்கு இலவசமாக பதிவு செய்து அடையாள அட்டைகள் தரப்பட்டன. இந்த நிகழ்வுக்கு அந்த தொகுதியின் எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் வருகை தந்தார்.

அவர் பேசுகையில் பிரதமர் மோடி , மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் 5 லட்சம் ரூபாய்க்கான ஆயுஷ் மான் பாரத காப்பீடு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டால் ஒரு லட்சம் நிதியுதவி, உயிரிழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கும் இ ஷாரம் திட்டம் ஆகியன முக்கியமானவை.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள தகுதியானவர்கள். அந்த அடிப்படையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் இ ஷாரம் திட்டத்தில் பதிவு செய்தவற்கான இலவச முகாமில் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த திட்டத்தை மாநில தொழிலாளர் நலத் துறை சார்பில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

அதிக அளவு தொழிலாளர்களை கொண்ட தமிழகத்தில் இந்த திட்டம் குறித்து முகாம்கள் நடத்தி அமைப்பு சாரா தொழிலாளர்களை இந்த திட்டத்தில் இலவசமாக பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்துதான் சட்டசபையில் பேசிய போது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தற்போது இந்த திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மத்திய அரசின் நலத் திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

எந்த ஒரு ஆக்கப்பூர்வமான விமர்சனம் வைத்தாலும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அந்த பொறுப்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல் கீழ்த்தரமான விமர்சனங்களை வைக்கிறார்.

தான் வெளிநாட்டில் படித்தவர், மத்திய அரசு அறிவுரை கூற என்ன நோபல் பரிசா வாங்கினார்கள் என அவர் கேட்கிறார். இதற்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின்தான் பதில் கூற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் அவர் சொல்வது குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை என்றும் விளக்கமளித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 519

    1

    0