கிக் தான் முக்கியம் என திராவிட மாடலில் நினைக்கிறார்கள்.. BREAKING NEWSக்காக நிவாரணம் : விளாசிய வானதி!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2024, 1:51 pm

கோவை வ.உ.சி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது :- சட்டமன்றத்தில் கோவை தொகுதிக்கு குரல் கொடுக்கும் போது கோவைக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்து உள்ளதாக துறை சார்ந்த அமைச்சர்கள் கூறுகிறார்கள். அமைச்சர்கள் வாய்ப்பு இருந்தால் கோவைக்கு வரும் போது எனது தொகுதிக்கு வர வேண்டும்.

சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள். சட்டமன்றத்தில் ஜனநாயகமாக பேசவிடுவதில்லை. மேட்டுபாளையம், கோத்தகிரி சாலையில் நீட் எதிரான வாசகங்கள் மற்றும் இந்தியா ஒழிக என்று எழுதுகிறார்கள். இது கண்டிக்கதக்கது.

மத்திய, மாநில அரசுக்கு பல முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இது போன்று இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்களை தடுக்க வேண்டும். தி.மு.க அரசு ஊக்குவிக்க கூடாது.
30 நாட்களுக்கு மேலாக நடக்கும் மானிய கோரிக்கை இந்த முறை 8 நாட்களுக்குள் முடிவடைந்தது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகம் போன்ற மிக முக்கியமான மாநிலத்திற்க்கு இந்த நாட்கள் போதது. இன்னும் மக்களின் பிரச்சனையை ஆழமாக விவாதிக்க வேண்டும். எதிர்கட்சிகள் பேசும் போது அதிக குறிக்கீடுகள் உள்ளது.

சட்டமன்றத்தில் தொகுதி மக்களிக்காக பேசும் வீடியோவை கூட தர மறுக்கிறார்கள். ஜனநாயக தன்மையோடு இயங்காத சட்ட பேரவையாக சவாலோடு பேச வேண்டியதாக இருக்கிறது.நல்ல தலைவர்கள் தமிழகத்திற்க்கு வர வேண்டும் என்றால் நடிகர் விஜய சொன்னதில் எந்த மாற்று கருத்தில்லை.

படித்தவர்களை விட மக்களுக்காக உணர்வு பூர்வமாக உழைக்க கூடியவர்கள் அரசியலில் தேவை. சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்து இருக்கலாம். ஆனால் அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்க்கு பிறகு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

மத்திய அரசு, கால சூழலுக்கு ஏற்றவாறு சட்ட திருத்திங்களில் திருத்தம் கொண்டு வந்து இருந்தாலும், பெயரை பொறுத்த அளவுக்கு இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழி தெரியாகவர்களுக்கு சில வார்த்தைகளை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதை மத்திய தலைமையிடம் நாங்கள் தெரிவித்து உள்ளோம்.

சட்டத்தில் இன்று பல திருத்தங்கள் தேவை. உயர் கல்வி துறை பொறுத்தவரை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கவர்னருக்கு எதிராக மிக தனிப்பட்ட முறையில் எதிரான மன நிலையோடு பேசுவது உயர் கல்வி துறையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. நானா… நீயா… என்கிற வகையில் மாநில அரசு எடுத்து கொள்கிறது.
கவர்னர் பொதுவெளியில் பேசுவதை இவர்களின் சித்தாந்திற்க்கு எதிராக பேசுவதாக எடுத்து கொண்டு, அவருக்கு எதிராக பேசுவது உயர் கல்வி துறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.

திராவிட மாடலில் கிக் தான் முக்கிய என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். பரப்பரப்பாக பிரேக்கிங் செய்தி வரக் கூடிய பிரச்சனைக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் அறிவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

உயர் கல்வித் துறை அமைச்சர் ஆளுநர் குறித்து கவர்னர் குறித்து தனிப்பட்ட முறையில் பேசுவதும் எதிரான மன நிலையில் செயல் படுவதும் உயர் கல்வித் துறையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

கவர்னர் அவருக்கு இருக்கும் கருத்து சுதந்திரத்திற்கு பொதுவெளியிலும் நிகழ்ச்சிகளில் பேசுவதை எல்லாம் இவர்களது சித்தாந்தத்திற்கு எதிராக இருப்பதாக நினைத்து செயல்படுவது உயர் கல்வித் துறையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்கு மேல் படிப்பிற்கு செல்வதாக வெளியாகும் தகவல் குறித்து கேட்ட போது “எனக்கும் அது தெரியவில்லை அவரிடம் இன்னும் அது பற்றி பேசவில்லை” என பதில் அளித்தார்.

  • meiyazhagan Movie OTT audience VS Theater audience மெய்யழகன்: ஓடிடி vs தியேட்டர் Audience Problem?
  • Views: - 268

    0

    0