மக்கள் பிரதிநிதியான முதலமைச்சரின் பேச்சை தான் கேட்பார்கள்.. ஆளுநர் பேச்சையா கேட்பாங்க : பேரிடர்ல அரசியல் செய்யாதீங்க!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2023, 4:16 pm

மக்கள் பிரதிநிதியான முதலமைச்சரின் பேச்சை தான் கேட்பார்கள்.. ஆளுநர் பேச்சையா கேட்பாங்க : பேரிடர்ல அரசியல் செய்யாதீங்க!

முதல்வர் ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதி கேட்கவும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் டெல்லி சென்றுவிட்டார். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்யவும் மீட்பு பணிகள் குறித்து விவாதிக்கவும் ஆட்சியர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.

அதன்படி மத்திய அமைப்புகள், ஆயுத படைகளின் உயர் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் சென்னை ராஜ்பவனில் நடந்தது. இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமான படை, தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இந்த கூட்டம் நடந்தது.
இதில் மாநில அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. முதல்வர் இல்லாத நிலையில் ஆளுநர் கூட்ட நினைத்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநில அரசு அதிகாரிகளே வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து எஸ்வி சேகர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கவர்னர் ஆட்சி இல்லாதபோது எத்தனை அதிகாரிகளுடன் பேசினாலும், ஆட்சியில் உள்ள முதல்வர் சொன்னாதான் அதிகாரிகள் கேப்பாங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கே முழு அதிகாரம். இந்த பேரிடர் சூழலில் எதிர் நிற்பவர்கள் இரக்கமின்றி அரசியல் செய்து ஆதாயம் தேடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

6 மாதம் கழித்து வரப்போகிற தேர்தலில் இந்த மழை வெள்ளத்தை வைத்து அறுவடை செய்ய நினைப்பதைவிட வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களை கை தூக்கி உதவுங்கள். அந்த தர்மம் உங்களை காக்கும் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 337

    0

    0