மணிப்பூரைத் தொடர்ந்து திரிபுராவில் கலவரம்; 144 தடை உத்தரவு; எதிர்க் கட்சிகள் சரமாரி கேள்வி,..

Author: Sudha
14 ஜூலை 2024, 9:14 காலை
Quick Share

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு ஒரு வருடம் ஆன நிலையிலும் மணிப்பூர் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

மணிப்பூர் கலவரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது வரை பிரதமர் அங்கு செல்லவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. ரஷ்யா செல்ல பிரதமருக்கு நேரம் இருக்கிறது, ஆனால் மணிப்பூர் போக நேரமில்லையா என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள கந்தசெரா கிராமத்தில் சமீபத்தில் கண்காட்சி ஒன்று நடந்திருக்கிறது. இதில் உள்ளூர் குழுக்கள் இரண்டுக்கு இடையில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. இந்த சண்டையில் பரமேஸ்வர் ரியாங் எனும் இளைஞன் கொல்லப்பட்டார்.

இளைஞரின் உறவினர்கள், கொலைக்கு நீதி கேட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்திருக்கிறது. இந்த வன்முறையில் ஏராளமான கடைகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பலர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலாய் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “கலவரத்தை மேலும் பரவ செய்ய சோஷியல் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்படியே சென்றால் சட்டம் ஒழுங்கு மோசமடையும் என்பதை உணர்ந்த நாங்கள், உடனடியாக இன்டெர்நெட் இணைப்பை துண்டித்திருக்கிறோம். மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இன்டெர்நெட் துண்டிக்கப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார்.

திரிபுராவில் வன்முறை சம்பவம் காரணமாக இன்டெர்நெட் துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது விவாதங்களுக்கு காரணமாகியுள்ளது.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 135

    0

    0