திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு கட்டண தரிசனம் இன்று முதல் ரத்து… இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

Author: Babu Lakshmanan
9 March 2022, 10:14 am

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று முதல் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருக்கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை கூறியதாவது :- இக்கோவிலில்‌ உயர்நீதிமன்ற உத்தரவுபடி, இந்துசமய ஆணையர்‌ சில நிபந்தனைகளை உத்தரவாக பிறப்பித்தார்கள்‌. இதன்படி ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள ரூ.250 கட்டணமும்‌, ரூ.20 கட்டணம்‌ ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. ரூ.100 கட்டணம்‌ மற்றும்‌ பொதுதரிசனம்‌ மட்டுமே இனி நடைமுறையில்‌ இருக்கும்‌.

இந்த தரிசன முறையிலும்‌ மூலவரை இரு வரிசையில்‌ வருபவர்களும்‌ சமமாக தரிசனம்‌ செய்யும்‌ வகையில்‌
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல்‌ கோயில்‌ பாதுகாப்பு பணியில்‌ 125 ஆயுதபடை காவலர்கள்‌ பாதுகாப்பு பணியில்‌ஈடுப்படுத்தப்படவுள்ளனர்‌. இதில்‌ முதற்கட்டமாக 60 பேர்‌ ஈடுபட உள்ளனர்‌. ரூ.100 கட்டணம்‌ தரிசனம்‌ மற்றும் பொது தரிசன முறையில்‌ வரும்‌ பக்தர்கள்‌ மகா மண்டபத்தில்‌ ஒரே வழியில்‌ அனைத்து பக்தர்களும்‌
சமமமாக சென்று மூலவரை தரிசனம்‌ செய்யும்‌ வகையில்‌ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள்‌ எவ்வித சிரமமின்றி தரிசனம்‌ செய்ய பல்வேறு மாற்றங்கள்‌ இன்னும்‌ பரிசீலனையில்‌ உள்ளது. விஐபி
தரிசனத்திற்கு தனிநேரம்‌ ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்‌ பரிசீலனையில்‌ உள்ளன, எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1861

    0

    0