தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2024, 8:04 pm

தமிழிசை குறித்து மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய கருத்துகளுக்காக வருந்துகிறேன் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், நான் மது குடித்தது கிடையாது, ஆனால் தன் மீது விமர்சனம் செய்த தமிழிசையும் என்னை போலவே குடிக்க மாட்டார் என நம்புகிறேன் என கூறினார்.

இதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், திருமாவளவன் கீழ்தரமான கருத்தை சொல்லுவார் என கனவிலும் நினைத்ததில்லை என கூறியிருந்தார்.

இதையும் படியுங்க: நடுரோட்டில் உருண்டு விழுந்த இரும்பு குண்டு… கார், இருசக்கர வாகனம் சேதம் : கோவையில் பரபரப்பு!!

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு இது குறித்து பேட்டியளித்த திருமாவளவன், காந்தி பிறந்தநாளில் மது ஒழிப்பு மாநாடு நடத்தினோம், அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென் றபோது ஆளுநர் வந்த பிறகு தான் அனுமதிக்க முடியும் என காவல்துறை தெரிவித்ததால், மாநாடுக்கு செல்ல வேண்டும் என்பதால் காத்திருக்க முடியவில்லை.

இதில் என்ன குற்ற உணர்வு? தரம் தாழ்ந்து பேச என்ன இருக்கு? இது அவரை காயப்படுத்தினால் வருந்துகிறேன், எனக்கு தமிழிசையுடன் நீண்ட நாள் பழக்கம் இருக்கிறது, அவரது தந்தை, அவரது கணவர் ஆகியோர் மீது மிகுந்த மரியாதை உள்ளது.

அவரோட தந்தை மது ஒழிப்பு மாநாட்டை பாராட்டி 2 பக்கம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். மது ஒழிப்பு கொள்கையில் திருமாவளவனுக்கு முரண்பாடு உள்ளது என தமிழிசை சொன்னதால்தான் நான் பதிலளித்தேன்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!