திருமாவளவன் அண்ணா.. ரொம்ப நன்றி.. ரூட் மாறும் காயத்ரி ரகுராம்? திடீர் சந்திப்பால் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2023, 8:40 am

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதற்காக நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த அவர், வேறு கட்சிகளில் சேர அழைத்தால் பரிசீலிப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தினமும் தனது ட்விட்டர் மூலம் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். காயத்ரி ரகுராம் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பகுதியில் அவர், “எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது. விசிக தலைவர், எம்.பி., அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு இது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் சமீபத்தில் காயத்ரி ரகுராம் கொடுத்த பேட்டியில் ஏற்கனவே இருந்த பிரச்னையில் திருமாவளவன் நடந்துகொண்ட விதத்தில் என் மனதில் உயர்ந்துவிட்டார் எனவும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

மேலும் இந்த சந்திப்பிற்கு பிறகு காயத்ரி ரகுராம், கடந்த காலத்தில் திருமாவளவனுக்கு எதிராக பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 578

    0

    0