பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan28 October 2024, 7:57 pm
பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி தவெக தலைவர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அக்கட்சி தலைவரும், நடிகருமான விஜய் உரையாற்றினார். கட்சி கொள்கைகள், கோட்பாடுகள் குறித்து பேசிய அவர் பாசிசத்தை பாயாசமா என கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது X தளப்பக்கத்தில்,
நடிகர் விஜய் அவர்களின் மாநாட்டு உரை குறித்து சற்று முன் ஊடகவியலாளர் எழுப்பிய வினாக்களுக்கு விடையிறுத்தேன்.
இதையும் படியுங்க: விசிக – விஜய் சமரசம்? மாநாட்டின் மாயாஜாலம்!
ஃபாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான். அவரோ “அவங்க ஃபாசிசம் என்றால் நீங்க பாயசமா ” என்று ஃபாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார்.
ஃபாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் அவருக்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா ? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை முன்னிறுத்துவதாலும்; “பிளவுவாதத்தை எதிர்ப்போம்” என கூறுவதாலும்; அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்று நாம் புரிந்துகொண்டால், ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏனென்ற கேள்வி எழுகிறது என பதிவிட்டுள்ளார்.