அறிவிச்சு 10 மாசம் ஆச்சு.. இன்னும் அதிகாரிகளையே நியமிக்கல ; திமுக அரசை அலறவிடும் திருமாவளவன்..!!

Author: Babu Lakshmanan
2 September 2022, 5:03 pm

சென்னை : தமிழக எஸ்சி, எஸ்டி ஆணையத்திற்கு உரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலுயுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம்பெற்றுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு எஸ்சி – எஸ்டி ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துக் கூறினர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார், அதில், தமிழ்நாடு எஸ்சி -எஸ்டி ஆணையத்திற்கு உரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ஆணையம் வீரியத்துடன் இயங்குவதற்கு ஏற்ற போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எஸ்சி எஸ்டி ஆணையம் அமைக்கப்பட்டு பத்து மாதங்கள் ஆன பின்பும் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை, இன்னும் அணையத்திற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் 6 அதிகாரிகளே ஆணையத்தின் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார்கள், இதுவரை ஆணையத்திற்கு சாதிப்பாகுபாடு தொடர்பாக 1100 மனுக்கள் வந்துள்ளன என்று தனியார் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியை டேக் செய்து தமிழக முதலமைச்சருக்கு திருமாவளவன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 441

    0

    0