கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணமா..? தவறை ஊக்குவிக்கிறதா தமிழக அரசு..? திருமாவளவன் ஓபன் டாக்..!!

Author: Babu Lakshmanan
16 May 2023, 9:54 am
Thirumavalavan - stalin - updatenews360
Quick Share

கள்ளசாராயம் குடித்து உயிரிலந்தோர் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருப்பது தவறை ஊக்குவிக்கும் அறிவிப்பாக பொருள் கொள்ள வேண்டியது இல்லை என்று மதுரையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:- தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இவ்வளவு பேர் உயிரிழந்துள்ள செய்தி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு அளித்தாலும், கள்ளசாராயத்தை விற்பனை செய்தவர்கள் கைது செய்திருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த உறுதி அளிக்கப்பட்ட நிலையிலும், தற்போது வரையில் மது விற்பனையை அனுமதித்தும் கூட கள்ளசாராயம் புழங்குகிறது. எனவே, கள்ளசாராயத்தை ஒழிப்பு மற்றும் மது விலக்கு அமல்படுத்துவது குறித்தும் தமிழக முதல்வர் சிந்திக்க வேண்டும். ஒரு சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கையை முன்வைத்து அரசின் செயல்பாடுகளை மொத்தமாக புறக்கணிக்க முடியாது. கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியை விசிக ஆதரிக்கிறது.

மரக்காணம் பகுதியில் பல ஆண்டுகளாக மக்களுக்கு கள்ளச்சாராய பயன்பாடு இருந்து வந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவரும் தண்டித்து களையெடுக்கப்பட வேண்டும். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தை கருத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டை ஏற்க வேண்டியுள்ளதே தவிர, இழப்பீடு தவறை ஊக்குவிக்க கூடுவதாக என பொருள்பெறக் கூடாது என கூறினார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 362

    0

    0