கள்ளசாராயம் குடித்து உயிரிலந்தோர் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருப்பது தவறை ஊக்குவிக்கும் அறிவிப்பாக பொருள் கொள்ள வேண்டியது இல்லை என்று மதுரையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:- தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இவ்வளவு பேர் உயிரிழந்துள்ள செய்தி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு அளித்தாலும், கள்ளசாராயத்தை விற்பனை செய்தவர்கள் கைது செய்திருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த உறுதி அளிக்கப்பட்ட நிலையிலும், தற்போது வரையில் மது விற்பனையை அனுமதித்தும் கூட கள்ளசாராயம் புழங்குகிறது. எனவே, கள்ளசாராயத்தை ஒழிப்பு மற்றும் மது விலக்கு அமல்படுத்துவது குறித்தும் தமிழக முதல்வர் சிந்திக்க வேண்டும். ஒரு சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கையை முன்வைத்து அரசின் செயல்பாடுகளை மொத்தமாக புறக்கணிக்க முடியாது. கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியை விசிக ஆதரிக்கிறது.
மரக்காணம் பகுதியில் பல ஆண்டுகளாக மக்களுக்கு கள்ளச்சாராய பயன்பாடு இருந்து வந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவரும் தண்டித்து களையெடுக்கப்பட வேண்டும். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தை கருத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டை ஏற்க வேண்டியுள்ளதே தவிர, இழப்பீடு தவறை ஊக்குவிக்க கூடுவதாக என பொருள்பெறக் கூடாது என கூறினார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.