அந்த நிகழ்ச்சிக்கு விஜய் வந்தால் நான் கலந்து கொள்வது சந்தேகம்தான்.. திருமாவளவன் ஓபன் டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2024, 1:23 pm

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அம்பேத்கர் குறித்தான புத்தக வெளியீடு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார்கள் என ஏற்கனவே கூறப்பட்டது. அது ஒரு ஆண்டுக்கு முன்பே திட்டமிட்டப்பட்டது. தற்பொழுது அந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து எங்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன்.

பஞ்சமி நிலம் தொடர்பாக கலைஞர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு மீண்டும் இயங்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளோம்.

பஞ்சமி நில மீட்பு மாநாடு நடத்த தற்போது திட்டம் எதுவும் இல்லை. அதுகுறித்த நிலைப்பாடு எடுக்கவில்லை. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

தமிழகத்தில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர் என்கிற வகையில், 234 மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு எடுத்துள்ளோம்.

இதையும் படியுங்க: உள்துறை அமைச்சர் பதவியும் எனக்குத்தான்.. முதலமைச்சரை எச்சரிக்கும் துணை முதலமைச்சர்!

இரண்டு சட்டமன்றத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர், இரண்டு தாலுகாக்களுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என, 144 மாவட்ட செயலாளர்கள் நியமித்து ஓராண்டு கடந்திருக்கிறது.

மேலும், நுண்ணிய அளவில் வரைமுறை செய்து ஏராளமான பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!