நான் கையை கட்டி குனிந்து பேசணுமா? வீரத்த மத்த இடத்துல காட்டுங்க.. செய்தியாளர்களிடம் கோபப்பட்ட திருமாவளவன்!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2023, 4:34 pm

வேங்கைவயல் விவகாரத்தை கண்டித்து அப்போதே விசிக கண்டனத்தை பதிவு செய்திருந்தது. மனித மலம் கொட்டிய சாதி வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தையே நடத்தியது..

மேலும் இந்த சம்பவம் நாட்டுக்கே அவமானமான செயல், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையே.. அதுதான் என்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.

ஆனால் இந்த விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளது குறித்து திமுக அரசை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய தினம் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து, வேங்கைவயல் விவகாரம் குறித்து திருமாவளவன் பேசினார். அப்போது, “சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிறது? இதுவரை ஒரு குற்றவாளியையும் திமுக அரசு கைது செய்யவில்லை.. திமுகவுக்கு ஆதரவாக விசிக செயல்படுகிறதா?” என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு திருமாவளவன்,”நாள் என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.. இத்தனை நாள் ஆகும் என்று வழக்குகளில் உறுதியாக சொல்ல முடியாது. ராமஜெயம் படுகொலையில், இத்தனை வருஷம் ஆகியும் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதுக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? சில வழக்குகளில் நிர்வாக சிக்கல் இருக்கலாம்.. அல்லது விசாரணையில் உறுதிப்படுத்தப்படாத தகவல் இருக்கலாம். ஆனால், திமுக அரசு, தலித் மக்களுக்கு எதிராக இல்லை.. வேங்கைவயல் பிரச்சனையில், யாரையும் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை..

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை .. ஆனால், அரசுக்கு தலித்துக்கு எதிராக செயல்பட வேண்டிய கட்டாயம் இல்லை.. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கட்டும்.. அதுல ஏதாவது அவசரம் இருக்கா? காலக்கெடு ஏதாவது இருக்கா? திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி போராட்டங்களை யாரும் நடத்தவில்லை.

தலித்துகள் பிரச்சனைகளுக்காக இந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தி உள்ளோம்.. நாளைக்குகூட கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்த போகிறோம்..

திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறதாலேயே இப்படி நீங்கள் அநாகரீகமாக பேசக்கூடாது.. எல்லாமே அரசு செய்யுங்க.. என்னங்க ஆவேசம்? திமுககாரனா நான்? இதெல்லாம் ரொம்ப அநாகரீகமான பேச்சு… அதிகாரிகளிடம் பேசிட்டு இருக்கோம்..

போராட்டம் நடத்திட்டு இருக்கோம்.. விசாரணை நடந்துட்டு இருக்கு.. புலனாய்வு போய்ட்டு இருக்கு.. நான் ஆவேசமா பேசறேன்னு சொல்றீங்க? இதுக்கு பெயர் ஆவேசமா? கையை நீட்டி பேச வேண்டாம் என்றால், நான் கையை கட்டிட்டு பேசனுமா? மீடியா முன்னாடி குனிஞ்சு பேசணுமா?” என செய்தியாளர்கள் மத்தியில் கொதித்து பேசியுள்ளார் திருமாவளவன்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!