எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த திருமாவளவன் செங்கல்பட்டு விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி18 பேர் உயிரிழந்துள்ளது வேதனை அளிப்பதாகவும், டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நிலையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளார். இருப்பினும் இந்திய ஒன்றிய அரசு மதுவிலக்கை ஒழித்தால் மட்டுமே கள்ளச்சாராயத்தினை அழிக்க முடியும் என்றும் இந்தியா முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படும் நிலை உள்ளதாக தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் சாராயத்தினால் கணவரை இழந்து வாழும் விதவைகளை அரசே தத்தெடுக்க வேண்டும், குடிநோயை கட்டுபடுத்த மையங்கள் அரசே நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மதுவிலக்கை உடனே கட்டுபடுத்த முடியாது என்றாலும் படிப்படியாக தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்றும் முண்டியம்பாக்கம் சாராயம் அருந்திய நோயாளிகளுக்கு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கபட்டு வருவதாகவும், மெத்தனால் சாராயம் அருந்தினால் காப்பாற்றுவதற்கான மருந்துகள் இருந்தால் அதனை தமிழக அரசு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கள்ளச்சாராயம் விற்பனையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக எதிர்கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என கூறும் எடப்பாடி பழனி சாமி இதுவரை இதற்காக எத்தனை போராட்டங்கள் செய்துள்ளார் என்றும் கூட்டணி கட்சியினர் நாங்கள் எதுர்ப்பு தெரிவிக்கிறோம்.
மதுவிலக்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட தயார் என்றால் அவர்களுடன் இணைந்து நாங்களும் போராட தயார் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
This website uses cookies.