எடைக்கு எடை இணையாக பணக்கட்டுகள்… வைரலாகும் கி.வீரமணியின் வீடியோ ; கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

Author: Babu Lakshmanan
17 August 2022, 10:03 pm

திருப்பத்தூரில் திராவிட கழகத்தின் சார்பில் நடந்த சந்தா வழங்கும் நிகழ்ச்சியில், அதன் தலைவர் கி.வீரமணியின் எடை எடைக்கு இணையாக பணக்கட்டுகள் வைத்து துலாபாரம் பெற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூரில் திராவிட கழகத்தின் சார்பில் சந்தா வழங்கும் நிகழ்ச்சி இருதினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில், திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திராவிடர் கழக தொண்டர்கள், பல்வேறு அமைப்பினர், பெரியார் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தினர் சந்தா வழங்கும் நிகழ்ச்சிக்காக வித்தியாசமான ஒரு ஏற்பாட்டை செய்தனர். அதாவது,கோவில்களில் துலாபாரம் எனப்படும் எடைக்கு எடை காணிக்கை வழங்குவதைப் போல, விடுதலை நாளிதழுக்கு வீரமணியின் எடைக்கு எடை பணக்கட்டுகளை வழங்க முடிவு செய்து இருந்தனர்.

அதன்படி மேடை அருகே ஒரு பெரிய தராசு அமைக்கப்பட்டு ஒருபுறம் கி வீரமணி அமர வைக்கப்பட்டார். மறுபுறம் ரூபாய் நோட்டு கட்டுகள் அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டு எடை பார்க்கப்பட்டது. சுமார் 20 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் எடை சமமாக இருந்தது.

அப்போது, எடையில் பணம் அதிகம் நிற்க வேண்டும் என்பதற்காக, கி.வீரமணியின் இருக்கும் தராசு பக்கம், திராவிட இயக்க நிர்வாகி ஒருவர் ஏறி அழுத்துகிறார். இதனை கி. வீரமணி பார்த்தும் பார்க்காதது போன்று இருந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்களும், பாஜக உள்ளிட்ட கட்சியினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 996

    0

    0