கோவிலில் திருடி 100 கோடி சொத்து: கில்லாடி மனிதர் சிக்கியது எப்படி? வெளியில் வந்த தில்லு முள்ளு…!!

Author: Sudha
1 August 2024, 4:33 pm

திருப்பதி கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரிய ஜீயர் மடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார், தேவஸ்தான ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர் 20 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமாரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அவரை கண்காணித்து தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அந்த சோதனையில் அவர் தன்னுடைய ஆசனவாயில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய அமெரிக்க டாலரை திருடி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்மீது தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், ரவிக்குமாரைக் கைதுசெய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரணையில் அவர் திருடிய பணத்தில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, தங்க ஆபரணங்கள் என ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்து வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துபவர்களிடம் அறிவுரை கேட்டு ரவிக்குமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தன்னுடைய மலக்குடலை பெரிதுப்படுத்தி கொண்டார் என்பது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. காணிக்கை விவகாரம் வெளியில் தெரிந்தால் கோயில்மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாழாகிவிடும் என்று கருதி, இந்த விவகாரத்தை லோக் அதாலத்திற்கு கொண்டு சென்றது தேவஸ்தானம்.சமரசம் பேசிய லோக் அதாலத் அதிகாரிகள், ரவிக்குமார் திருடி வாங்கி குவித்த சொத்துகளில் ஒரு பகுதியை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் எழுதி வாங்கிக் கொண்டனர். இந்த முடிவிற்கு அப்போது ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்தது.

இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!