மீஞ்சூரில் திமுக போட்டி வேட்பாளர் வெற்றி… அதிகாரப்பூர்வ திமுக வேட்பாளர் தோல்வியடைந்ததால் ஆத்திரம்… மற்றொரு தரப்பு திமுகவினர் சாலை மறியல் !!

Author: Babu Lakshmanan
4 March 2022, 1:45 pm

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 14 வார்டுகளில் திமுக கூட்டணியும், 1 அதிமுக வேட்பாளரும், 3 சுயேட்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர். திமுக சார்பில் தலைவர் வேட்பாளராக 11வது வார்டில் வெற்றி பெற்ற சுமதி தமிழ்உதயன் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை தலைவர் பதவிக்கு திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுமதி தமிழ்உதயன் மற்றும் 10வது வார்டில் வெற்றி பெற்ற அதிருப்தி வேட்பாளர் ருக்மணி மோகன்ராஜ் ஆகிய இருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து மீஞ்சூர் பேரூராட்சி கூட்ட அரங்கில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.

மறைமுக வாக்கெடுப்பு முடிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அதிருப்தி வேட்பாளர் ருக்மணி மோகன்ராஜ் 9 வாக்குகள் பெற்றார்.

திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் மருமகளை குலுக்கல் முறையில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகலிங்கத்தின் மருமகளும், நகர செயலாளரின் மனைவியுமான ருக்மணி எதிர்த்துப் போட்டியிட்டு குலுக்கல் முறையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்