‘தண்ணியில்ல காற்று கூட வரல’… செட்அப் குழாய்களை போட்டு மோசடி ; கிராமத்திற்கே விபூதி அடித்த கான்ட்ராக்டர்…

Author: Babu Lakshmanan
21 November 2022, 6:08 pm

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருகே கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு குழாய்களை அமைத்து விட்டு, குடிநீர் இணைப்பே கொடுக்காத கான்ட்ராக்டரால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

சேத்துப்பட்டு வட்டம் இந்திரவனம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வசதியாக, வீட்டுக்கு வீடு குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தனியாருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டது.

அதன்பேரில், கான்ட்ராக்டர்கள் வீட்டுக்கு வீடு குழாய் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். விரைவில் பணிகள் முடிந்து வீடுதோறும் தண்ணீர் குழாய் இணைப்பு கிடைத்து விடும் என்று அக்கிராம மக்கள் நம்பியிருந்தனர்.

ஆனால், நடந்ததோ வேறு. பெயரளவுக்கு மட்டும் குழாய்களை அமைத்து விட்டு, இணைப்பு ஏதும் வழங்காமல் சென்றுள்ளனர் கான்ட்ராக்ட்காரர்கள். அதிலும், இக்குழாய் அமைத்ததற்காக வரி விதிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது.

குழாய் நீர் இணைப்பு கொடுக்காமல், வெறும் செட்அப் மட்டுமே கான்ட்ரக்டர்கள் செய்து விட்டு சென்றதாகவும், மண்ணில் சிறிதளவு புதைத்து விட்டு, கீழே குழாய்களை இணைக்காமல் போட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் அப்பகுதியின் புகார் தெரிவிக்கின்றனர்.

https://twitter.com/Babubabuji16/status/1594647960650125313

இந்த நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் செட் அப் குழாயை கையால் பிடித்த இழுப்பதும், அது அப்படியே வெளியே வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூ.3.69 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழாயில், தண்ணீர் மட்டுமல்ல, காற்று கூட வராது என்று அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, சாலை அமைப்பதில் ஒப்பந்ததாரர்கள் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது குழாய் அமைப்பதிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி