இந்த ஆணவம் திமுகவின் பிறவி குணம்… CM ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண் : வீடியோ பகிர்ந்து விளாசிய அண்ணாமலை!!
Author: Udayachandran RadhaKrishnan31 March 2024, 6:53 pm
இந்த ஆணவம் திமுகவின் பிறவி குணம்… CM ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண் : வீடியோ பகிர்ந்து விளாசிய அண்ணாமலை!!
ஈரோட்டில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், காய்கறி பெண் வியாபாரியிடம் வாக்கு சேகரித்த போது மகளிர் உரிமைத்தொகை குறித்து அந்த பெண் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
தற்போது இந்த வீடியோவை தனது X தளத்தில் பகிர்ந்த அண்ணாமலை, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது வெறும் 30 சதவீத மகளிருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது.
எனக்கு ஏன் ஆயிரம் ரூபாய் நீங்கள் வழங்கவில்லை என்று ஒரு சகோதரி முதல்வரை இன்று கேள்வி கேட்டுள்ளார்.
நீங்கள் இந்த கேள்வியை கேட்பதே தவறு என்று அந்த சகோதரியிடம் திரு முக ஸ்டாலின் சொல்கிறார்.
இந்த ஆணவம் திமுகவின் பிறவி குணம். தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் திமுகவை இந்த தேர்தலில் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.