அரசு முறை பயணமல்ல, இது குடும்ப சுற்றுலா : முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2022, 2:09 pm

சசிகலா குறித்த ஒபிஎஸ் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து, அரசியல் வேறு, தனிப்பட்ட கருத்து வேறு என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக சேலம் புறநகர் மாவட்ட உட்கட்சி தேர்தலை கட்சி எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக உட்கட்சி தேர்தல் முடிந்த பின்பு ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

எட்டு வழி சாலை திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. இப்போது அந்த திட்டத்திற்கு எக்ஸ்பிரஸ் வே என்று பெயர் மாற்றி உள்ளனர். முதல்வரின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா, தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் துபாய் செல்லவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகவே துபாய் சென்றுள்ளார்.

துபாய் சர்வதேச கண்காட்சி முடியும் நேரத்தில் தமிழக அரங்கு திறக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை. சசிகலா குறித்த ஒபிஎஸ் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து, அரசியல் வேறு, தனிப்பட்ட கருத்து வேறு. சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது என கூறினார்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 1482

    0

    0