சென்னை மாநகர வரலாற்றில் இதுவே முதன்முறை…. தமிழக அரசு சார்பில் மலர் கண்காட்சி : ஜூன் 3ல் துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!!
Author: Udayachandran RadhaKrishnan14 May 2022, 10:57 am
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அன்று சென்னையில் தமிழக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை நடைபெறும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கருணாநிதி உருவ வடிவில் மலர் அலங்காரம், ஓராண்டின் சாதனையை விளக்கும் வகையில் மலர் கண்காட்சி வடிவமைக்கப்படுகிறது.
ஜூன் 3-ஆம் தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த பின்னர் 5-ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புனே, பெங்களூரு, ஊட்டி, ஒசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வகையிலான மலர்களால் கண்காட்சி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவ சிலை, சென்னையில் வருகிற 28-ஆம் தேதி திறக்கப்படுகிறது. சிலையை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திறந்துவைக்கிறாா்.
சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கருணாநிதிக்கு ரூ.1.56 கோடி செலவில் சிலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.