இதுதான் சரியான நேரம் : தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan8 June 2024, 11:33 am
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,520 குறைந்தது 53 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. : ஒரு கிராம் ₹190 குறைந்து ₹6,650க்கு விற்பனை செய்யப்படுகிறது, நேற்று ரூ.6,840-க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.190 குறைந்து ரூ.6650-க்கு விற்பனையாகி வருகிறது.
மேலும், சென்னையில் வெள்ளியின் விலை ரூ.450 குறைந்து ரூ.96-க்கும், கிலோ வெள்ளி ரூ.4,500 குறைந்து ரூ.96,000-க்கும் விற்பனையாகிறது.