பாஜகவுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்ததே இதுக்காகத்தான் : புதுச்சேரி முதலமைச்சரின் மாஸ்டர் பிளான்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2024, 1:59 pm

பாஜகவுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்ததே இதுக்காகத்தான் : புதுச்சேரி முதலமைச்சரின் மாஸ்டர் பிளான்!!

புதுச்சேரியில் பாஜக கட்சியை சேர்ந்த நபர் தான் போட்டியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் இருந்தன. புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளளது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக உள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால் , என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தான் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முக்கிய தகவலை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒரு விழாவில் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அரசியல் விழாவில் அவர் பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் .

மேலும், நமது ஆட்சியில் நாம் மக்களிடம் சொன்னதை செய்துள்ளோம். அதனை மக்கள் முன்னர் எடுத்து கூற வேண்டும். நமது கூட்டணி வேட்பாளரை நாம் ஒன்றாக இணைந்து ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும். நமது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நம்புவோம் என பேசியுள்ளார்.

இதன் மூலம், பாஜக போட்டியிட முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டுள்ளதாவும், மாறாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது . மேலும், தான் கூறும் பாஜக வேட்பாளரை தான் புதுச்சேரியில் நிறுத்த வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!