ஆளுநர் அவரரோட வேலையை மட்டும் பார்த்திருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது : சீமான் கொந்தளிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2023, 4:35 pm

ஆளுநர் அவரரோட வேலையை மட்டும் பார்த்திருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது : சீமான் கொந்தளிப்பு!!

மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எல்லாம் ஆட்சி கலைக்கப்படுமா என்ன? குண்டு வீசியவனுக்கும் இந்த ஆட்சிக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளதா? ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.

இதற்கு முன்பு இப்படியெல்லாம் குண்டு வீசினார்களா?; என்னத்தையாவது வாய்க்கு வந்ததை எல்லாம் ஆளுநர் பேசிக் கொண்டு இருக்க கூடாது.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அன்புமணி பேசியதற்கு பதிலளித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதுகிறார். பீகாரில் நிதிஷ்குமார் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பை பிரதமரை கேட்டா எடுத்தார்.

சட்டநாதன் அறிக்கையை கிடப்பில் போட்ட பெருந்தகை ஐயா கருணாநிதிதான். திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காது. ஏனென்றால் எத்தனை பேர் என் இடத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்துவிடும்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…