இந்தமுறை திமுகவின் தேர்தல் அறிக்கை SPECIAL..எம்பி கனிமொழி வைத்த ட்விஸ்ட் : வெளியாகும் அறிவிப்பு!!
சென்னை விமான நிலையத்தில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திமுக யாரையும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் ஒர் ரெய்டு தான் அனைவரும் முடியும் என்றால் அதிமுக பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போதே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஒர் ரெய்டினால் மாறி விட போவகும் நிலை இல்லை.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது மக்களையும் ஒவ்வொரு துறையிலும் செயல்பட்டு கொண்டு இருக்கிற மக்களையும் சந்தித்து கோரிக்கைகளை பெற்று தேர்தல் அறிக்கையை தயாரிப்பது வழக்கமாக கொண்டு உள்ளது.
திமுக தேர்தல் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள், விவசாயிகள், தன்னார்வலர்கள், தொழில் துறை உள்பட அனைவரையும் சந்தித்து பிரச்சினைகள், கோரிக்கைகள் கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறி உள்ளார்.
தேர்தல் அறிக்கை குழு நாளை தூத்துக்குடியில் தொடங்க உள்ளோம். பின்னர் மற்ற மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். யார் எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதை திமுக தலைவர்- முதலமைச்சர் முடிவு செய்வார்.
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குழுவில் நான் இல்லை. அந்த குழுவில் உள்ளவர்களிடம் கேட்க வேண்டும்.
தேர்தல் அறிக்கை குறித்து மக்களிடம் என்ன எதிர்ப்பார்ப்பு கோரிக்கை ஆகியவற்றை கேட்டு தயாரிப்போம். ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் மாநில உரிமைக்கு முக்கியத்துவம் தரப்படும். அதுவும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என அவர் கூறினார்.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.