‘இப்ப மட்டும் ஏன் வர்றீங்க..?’ அமைச்சரை காரை விட்டு இறங்க விடாமல் விரட்டியடித்த மக்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

Author: Babu Lakshmanan
19 April 2024, 5:06 pm

தூத்துக்குடி அருகே தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொட்டலூரணி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காரை விட்டு இறங்கவிடாமல் பொதுமக்கள் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: ஓட்டுப் போட வருமாறு அழைப்பு விடுத்ததால் ஆத்திரம்… வட்டாட்சியரை விரட்டியடித்த ஏகனாபுரம் மக்கள்!!

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் கிராமத்தின் அருகே உள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அந்த கிராமத்திற்கு திமுகவினருடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் அனிதா ராதாகிருஷ்ணனை, காரை விட்டு இறங்கவிடாமல், இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள்..? இப்போது ஏன் வருகிறீர்கள்..? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பின்னர், “பேச்சுவார்த்தை வேண்டாம். நாங்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடத்தான் போகிறோம், பின்வாங்க மாட்டோம்,” எனக் கூறி விரட்டி அடித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!