தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு ; வெள்ள பாதிப்பு புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார்

Author: Babu Lakshmanan
26 December 2023, 4:47 pm

தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை புரிந்தார். அவரை திமுக எம்பி கனிமொழி, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், அலுவலகத்தில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புகைப்படக் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

பின்னர், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோருடன் தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் நான்கு வழிச்சாலையில் பாலம் சேதம் அடைந்த பகுதிகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி