அந்த 11 திமுக அமைச்சர்கள் புழல் சிறையில் இருக்க வேண்டியவர்கள்.. பட்டியலிட்டு புயலை கிளப்பிய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2023, 7:08 pm

அந்த 11 திமுக அமைச்சர்கள் புழல் சிறையில் இருக்க வேண்டியவர்கள்.. பட்டியலிட்டு புயலை கிளப்பிய அண்ணாமலை!!

துரைமுருகன், நேரு, பெரியசாமி, பொன்முடி, MRK பன்னீர்செல்வம், KKSSR ராமசந்திரன், தங்கம் தென்னரசு, S ரகுபதி, KR பெரியகருப்பன், தா.மோ. அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் என 11 பேர் இருக்க வேண்டிய இடம் புழல் சிறை. ஆனால், சட்டமன்றத்தில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இன்றைய என் மண் என் மக்களே (En Mann En Makkal) பயணம், தேனியில், எங்கு நோக்கினும் மக்கள் முகம் எனும் அளவுக்கு, திடமான மனதிற்கும் வீரத்திற்கும் பெயர்போன பெருந்திரளான மக்கள் கூடி, மிகச் சிறப்புடன் நடந்தது.
பெரிய குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார், 50,000 ஏக்கர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் சேலத்து மாம்பழத்திற்கு பிறகு தேனி மாம்பழம் மிகவும் பெருமை வாய்ந்தது. மேலும் பல பகுதிகளில் மொத்தம் 500 க்கும் மேற்பட்ட செங்கல் சூலைகள் இயங்கி வருகின்றன.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை போடி, வருஷநாடு, பெரியகுளம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் இலவம் சாகுபடி நடக்கிறது. கேரளாவில் இருந்து வியாபாரிகள் கொள்முதலுக்காக தேனி மாவட்டத்திற்கு அதிகளவில் வருகை தரும் சிறப்பு பெற்றது.

தமிழகத்தில் அமைச்சர்களாக இருக்கும் துரைமுருகன், நேரு, பெரியசாமி, பொன்முடி, MRK பன்னீர்செல்வம், KKSSR ராமசந்திரன், தங்கம் தென்னரசு, S ரகுபதி, KR பெரியகருப்பன், தா.மோ. அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் என 11 பேர் மீது ஊழல் புகார் உள்ளது. இவர்கள் இருக்க வேண்டிய இடம் புழல் சிறை. ஆனால், சட்டமன்றத்தில் உள்ளனர்.

1952ஆம் ஆண்டு இந்த பெரியகுளம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு சென்றவர் கல்வி தந்தை மூக்கையா தேவர் அவர்கள். ஆனால் அவர் அலங்கரித்த சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தற்போது, திமுக வை சேர்ந்த K சரவண குமார் உள்ளார்.

இவர் மீது IPC SEC 171E லஞ்சம் வாங்கியதற்காக திருநெல்வேலி மூலக்கரைபட்டி காவல் நிலையத்தில் FIR உள்ளது. மூக்கையா தேவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதியில், இன்று ஒரு ஊழல்வாதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

தமிழகத்தில் அமைச்சர்களாக இருக்கும் துரைமுருகன், நேரு, பெரியசாமி, பொன்முடி, MRK பன்னீர்செல்வம், KKSSR ராமசந்திரன், தங்கம் தென்னரசு, S ரகுபதி, KR பெரியகருப்பன், தா.மோ. அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் என 11 பேர் மீது ஊழல் புகார் உள்ளது. இவர்கள் இருக்க வேண்டிய இடம் புழல் சிறை. ஆனால், சட்டமன்றத்தில் உள்ளனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 325

    0

    0