அந்த ரெண்டு கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் : அண்ணாமலை கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2024, 5:05 pm

அந்த ரெண்டு கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் : அண்ணாமலை கடும் விமர்சனம்!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அடுத்ததாக டெல்லியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

டெல்லி பா.ஜ.க தென்னிந்திய பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

டெல்லியில் 7 தொகுதிகளிலும் இம்முறை பா.ஜ.க வெற்றி பெற்று வர வேண்டும். காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எதிரானவர்கள் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி, இன்று ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கிறார்கள்.

கலால் கொள்கை ஊழலில் முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள். நாட்டை சுத்தம் செய்கிறோம் என்று கூறி 6000 கோடி ஊழல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க: நீட் தேர்வில் ஆள்மாறாட்டமா? முன்கூட்டியே கசிந்த வினாத்தாள்? நடந்தது என்ன? குவியும் கண்டனம்!

சுயநிதி குழுக்களுக்கு ஒரு லட்சம் போலி கணக்குகளை உருவாக்கி ஊழல். ஆம் ஆத்மி ஊழலுக்கு இலக்கணமாக இருக்கக்கூடிய ஆட்சியாக இருக்கிறது என விமர்சித்தார். ஆம் ஆத்மியும், காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளுடன் டெல்லியில் தேர்தல் களத்திற்கு வந்துள்ளனர் என விமர்சித்தார்.

ஒரு தலைவர் பேசாததை பேசியதாக திரித்து வெளியிட்டு வருவதாக தெரிவித்த அண்ணாமலை, இது காங்கிரஸ் கட்சியின் தோல்வி பயத்தை காட்டுவதாக கூறினார். எனவே தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!