இளம் பெண்ணுடன் ஆபாசமாக படம் எடுத்து ₹1 கோடி கேட்டு டாக்டருக்கு மிரட்டல் : பகையாளியான நண்பர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2024, 2:40 pm
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரபல தனியார் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் குமரேசேன் இவரும் காரைக்குடி, மற்றும் அருகிலுள்ள ஊர்களில் மொபைல் கடை நடத்தி வரும் லேனா மொபைல் உரிமையாளர் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளருமான லேனா சுப்பு என்ற சுப்பிரமணியும் பால்ய சிநேகிதர்கள் என்று கூறப்படுகிறது
இவர்களுக்குள் உள்ள நட்பு ஊர் அறிந்த நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் விருந்து வைத்து கொள்வதும் அந்த விருந்தில் காரைக்குடியை சேர்ந்த வசதி படைத்த பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் பங்கேற்பதும் இலைமறை காயாக காரைக்குடியில் பல்வேறு தரப்பினருக்கும் காவல் துறையில் உள்ள அவர்களது நண்பர்களும் அறிந்த விசயமாக இருந்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென டாக்டர் குமரேசனை சுப்பு ஊருக்கு ஒதுக்கு புரமாக (அரியக்குடி) உள்ள தன்னுடைய பஃப் க்கு அழைத்து இளம்பெண்ணுடன் இணைத்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து ஒரு கோடி கேட்டு சித்ரவதை செய்ததாக தகவல் தீயாய் பரவியது.
இது தொடர்பாக இரு தரப்பினருடனும் சமரச முயற்சியை அவர்களுடன் தொடர்புடை சிலர் மேற்கொண்டதாகவும் தெரிகிறது
லேனா சுப்பு
சமரசம் ஏற்படாமல் போனதால் இதனையடுத்து நான்கு நாட்கள் கழித்து டாக்டர் குமரேசன் தன் கைபட காவல் துறையில் அளித்த புகாரை ரகசியமாக வைத்துக் கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
விசாரணை நடைபெறுவதை அறிந்த சம்பவத்தில் தொடர்புடைய லேனா சுப்பு என்ற சுப்பிரமணி உள்ளிட்டோர் தலைமறைவாகினர்
மொபைல் கடையில் வேலை செய்பவர்கள் சம்பவ நேரத்தில் இருந்த இளம் பெண்ணின் உறவினர்கள் என பல்வேறு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்த போலீசார் சுப்பிரமணி வீடு நிறுவனங்களிலும் விசாரணைனையை தொடங்கினர்
அப்போது 5திற்கும் மேற்பட்ட விலையுயர்ந்த சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டதாகவும் குற்றவாளிகள் சிக்காத நிலையில் அந்த கார்களை ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் தெரிகிறது
டாக்டர் குமரேசன்
இதனிடையே சுப்புவின் தாயார் லெட்சுமி தென்மண்டல ஐஜியிடம்
இது குறித்து தனது மகன் மீது டாக்டர் தவறான புகார் அளித்திருப்பதாகவும் டாக்டரும் டாக்டரது அண்ணன் செந்தில்குமார் (இவரும் டாக்டர்) இணைந்து நடத்தும் மருத்துவமனையில் டாக்டரின் அண்ணன் கணக்கு வழக்குகளை சரியாக கையாளவில்லை .
அதனை எப்படி சரி பார்பது என்று சுப்புவிடம் பேசி கணக்கு வழக்குகள் சரிபார்பதற்காக வந்த நிலையில் இதனை அறிந்த டாக்டரின் அண்ணன் அடியாட்களை அனுப்பி கணக்கு வழக்குகளில் உதவிய பெண்ணை இணைத்து புகைப்படம் எடுத்ததாகவும் இந்த சம்பவம் நடந்த நான்கு நாட்கள் கழித்து அண்ணனும் தம்பியும் இணைந்து உதவ சென்ற என் மகன் மீது புகார் கொடுத்துள்ளதாகவும் இது குறித்து விசாரிக்குமாறும் புகார் அளித்திருந்தார்
இதனிடையே காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிந்த போலீசார் வழக்கு குறித்த விபரங்களை ரகசியமாக வைத்திருந்தனர்.
குற்றவாளிகள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகிய நிலையில் போலீசாரின் வழக்கு அடிப்படையில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது
இந்நிலையில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது குற்றவாளிகள் பிடிபடும் போது டாக்டரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் அப்போது பல ஆண்டுகளாக நடந்த பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரலாம் என்றும் அவர்களக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் குறித்த ரகசியமும் வெளி வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது