அமைச்சர் கார் மீது காலணி வீச்சு… திமுக – பாஜக மாறி மாறி புகார் : ஒரே வார்த்தையில் பதில் கூறிய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2022, 7:41 pm

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். இவரது உடல் இரு நாட்களுக்கு பின் மதுரை கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையம் வந்த லட்சுமணின் உடலுக்கு, தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே அஞ்சலி செலுத்துவதில் திமுக – பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய பின்னர், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டர். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை எரிந்துள்ளார்.

இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். தமிழக அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்டது தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர், பாஜகவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

அதில் மதுரை பாஜக மாவட்ட துணைத் தலைவர் மார்க்கெட் குமார், பாலா, திருச்சியை சேர்ந்த ஜெயகிருஷ்ணா, கோபிநாத் மற்றொரு கோபிநாத் என 5 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் ஆகியோரை அவதூறாக பேசியதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது பாஜக சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சரின் கார் செருப்பு வீசியது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், நான் வன்முறையை கையில் எடுக்கக் கூடிய கட்சியை நடத்தவில்லை. தொண்டர்கள் யாருக்கும் வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப் போவதும் கிடையாது. நமது கட்சி ஆழமான தேசிய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்கக் கூடிய கட்சி பாஜக என்று தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 652

    0

    0