சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வந்துவிடுமோ என பதறும் காலம் மாறிவிட்டது : முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2023, 1:06 pm

சென்னையில் மழையா? வெள்ளம் வந்துவிடுமோ என பதறும் காலம் மாறிவிட்டது : முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இன்று மட்டும் கனமழை எச்சரிக்கை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது தொடர்பாகவும், மழை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவ்டிக்கைகள் குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்.

தூர்வாருதல், புதிதாக 876 கி.மீக்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.

மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்